அமெரிக்க தேசிய கீதத்தை மதிக்காமல் நடனம் ஆடிய ட்ரம்ப்..! சர்ச்சை வீடியோ.

தேசிய கீதம் பாடும்போது நேராக நிமிர்ந்து அசைவற்று நிற்பதுதான் தேசிய கீதத்துக்கு ஒருவர் செய்யும் மரியாதை என்பது காலங்காலமாக இருந்து வரும் பழக்கவழக்கமாகும். ஆனால் எதையுமே வித்தியாசமாக செய்து பார்க்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க தேசிய கீதம் நிகழ்ச்சி ஒன்றில் இசைக்கப்பட்ட போது இவரே ஏதோ மியூசிக் கண்டக்டர் போல் கையையும் காலையும் ஆட்டி செய்கை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு சூட்டும், சிகப்பு டையும் அணிந்திருந்த ட்ரம்ப் மற்றவர்கள் அனைவரும் தேசிய கீதத்துக்கு நேராக நின்று மரியாதை செலுத்த இவர் மட்டும் கையையும் காலையும் ஆட்டி இசை கண்டக்டர் போல் செயல்பட்டது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ரோட் தீவு காங்கிரஸ் உறுப்பினர், டேவிட் சிசிலைன் ட்ரம்ப்பை விமர்சித்து ட்வீட் செய்கையில், “நாட்டுப்பற்றுக்கே தான் உதாரணம் என்று கூறிக்கொள்பவரின் செய்கை இதுதான். தேசிய கீதம் மேல் அவருக்கு மரியாதை இருப்பதாகத் தெரியவில்லை” என்று விமர்சித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லேடி மெலானியா ட்ரம்ப் மாறாக தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்ததும் ட்ரம்புக்கு முரணான ஒரு விஷயமாக அங்கு பேசப்பட்டு வருகிறது.