அமெரிக்காவை காப்பாற்ற ஒரே வழி டிரம்ப் பதவி விலகுவதே..!மலேசிய பிரதமர் மகாதீர்.

அண்மையில் இஸ்ரேல் பாலத்தீன விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். மேலும் 'மத்திய கிழக்கு அமைதித் திட்டம்' ஒன்றையும் அவர் முன்வைத்திருந்தார்.

'இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம்' என்று அதிபர் டிரம்ப் வர்ணித்த அந்தத் திட்டத்தை மலேசியப் பிரதமர் மகாதீர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவைக் காப்பாற்ற டிரம்ப் பதவி விலகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்க மக்கள் குறித்து நான் ஏதும் சொல்லவில்லை. அமெரிக்க குடிமக்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால் அதிபர் டிரம்ப் அப்படியல்ல. எனவேதான் அமெரிக்காவைக் காப்பாற்ற அவர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினேன், என்று இன்று (திங்கள்கிழமை) சைபர் ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார். டிரம்ப் தன்னையும் தன் கொள்கைகளையும் தாமே இழிவுபடுத்திக் கொண்டுள்ளார். மேலும் வெளிநாட்டு அழுத்தங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார், என்றார் மகாதீர்.

More News

கொரோனோ வைரஸிலிருந்து சீனாவை காக்க இந்தியா தயாராக இருக்கிறது..! பிரதமர் மோடி.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு: பிரபல நடிகர் அறிவிப்பு

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று பிரபல நடிகர் ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் அரசியலில் வெற்றிடம் நிலவுகிறதா??? ஒரு சிறப்பு பார்வை

ஜம்மு & காஷ்மீரில் சிறப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப் பட்டு ஆறுமாதங்கள் ஆகின்றன. தற்போது, இந்திய நிர்வாகத்தின் கீழ் இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன

ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் விஜய் படத்தின் காப்பியா? பரபரப்பு தகவல்

2020 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது உருவாக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகர் ஆகிவிட்டார் என்பது ஏற்கனவே தெரிந்ததே