தொடர்ந்து பைக் ஓட்டுவேன், என்னிடம் சர்வதேச லைசென்ஸ் இருக்குது: விடுதலையான டிடிஎப் வாசன் பேட்டி..!

  • IndiaGlitz, [Friday,November 03 2023]

யூடியூபர் டிடிஎஃப் வாசன் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள நிலையில் தன்னிடம் சர்வதேச லைசன்ஸ் இருப்பதாகவும் அதனால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டிய டிடிஎஃப் வாசன், சாகசம் செய்ய முயன்ற போது விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவருக்கு பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவர் பலமுறை ஜாமீனுக்கு விண்ணப்பம் செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்தது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிஎஃப் வாசன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’விபத்தில் கை போனதை விட லைசென்ஸ் போனதுதான் மனம் வருந்தினேன் என்றும் லைசென்ஸ் ரத்து என்பதை கேள்விப்பட்டு கண் கலங்கிவிட்டேன் என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் என்னிடம் சர்வதேச லைசென்ஸ் இருக்கிறது என்றும் அதனால் தொடர்ந்து பைக் ஓடுவேன் என்றும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

வணக்கம் இந்தியா.. 'இந்தியன் இஸ் பேக்': ரஜினி வெளியிட்ட 'இந்தியன் 2' வீடியோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக

மீண்டும் இணைகிறார்களா முத்து-மீனா? 'சிறகடிக்க ஆசை'யில் திடீர் திருப்பம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் குறுகிய காலத்தில் இந்த சீரியல் டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்துள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'லேபில்' சீரிஸ்: இரண்டாவது டிரெய்லர் ரிலீஸ்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் நடிப்பில், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் லேபில் சீரிஸின்

கமல்-ஷங்கர் கொடுக்க போகும் டபுள் ட்ரீட்.. அதுவும் ஒரே வருடத்தில்.. ரசிகர்கள் குஷி..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

ரஜினிக்கு வில்லனாக இந்த பிரபல நடிகர்-இயக்குனரா?  லோகேஷின் வேற லெவல் பிளான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' என்ற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த சில தகவல்கள் கசிந்து வருகிறது.