தினகரன் பொதுச்செயலாளரா? அதிமுக அமைப்பு செயலாளர் பதவி விலகல்

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் சிறையில் இருக்கும்போது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப்பொதுசெயலாளராக நியமனம் செய்தார்.
அதிமுகவில் பல சீனியர் தலைவர்கள் இருக்கும்போது ஜெயலலிதாவால் கட்சியை நீக்கப்பட்டவருக்கு துணைபொதுச்செயலாளர் பதவி அளித்திருப்பது கட்சியினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிருப்தியின் விளைவாக டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் பதவியை கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் கலந்துபேசி ஓபிஎஸ் அணியில் இணைவதா என்பது குறித்த அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று கருப்பசாமி பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

More News

சசிகலா: ஜெ. நினைவிடத்தில் சபதம். எம்.ஜி.ஆர் இல்லத்தில் தியானம்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பெங்களூர் கிளம்பிவிட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதற்கு முன்னதாக முன்னாள் முதல்வரும் தனது தோழியுமான ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் சபதம் ஏற்றார்.

சசிகலா செய்த சபதம் என்ன? கோகுல இந்திரா விளக்கம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய சற்று முன் கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அவருடைய சமாதி முன் கையால் ஓங்கி அடித்து சபதம் ஏற்றார்...

சசிகலா மீது ஆள்கடத்தல் வழக்கு. கைது செய்யப்படுவாரா?

ஜெயலலிதா சமாதி மீது சபதம் செய்துவிட்டு பெங்களூர் சிறையை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் மீது இன்னொரு வழக்கு புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெ. நினைவிடத்தில் சசிகலா சபதம். பெரும் பரபரப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரில் சரண் அடைய கேட்டிருந்த அவகாசம் நிராகரிக்கப்பட்டதால் சற்று முன் பெங்களூருக்கு கிளம்பினார். செல்லும் வழியில் அவர் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார்...