டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

ஒருங்கிணைந்த அதிமுகவின் சின்னமான இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில், டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கடந்த நான்கு நாட்களாக விசாரணை செய்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்துள்ளனர்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டிடிவி தினகரனிடம் இருந்து ரூ.1.30 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வாக்குமூலம் பெறப்பட்டது. இதன் அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுத்ததாக, டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ய டிடிவி தினகரன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பபட்டது. இந்த சம்மனை ஏற்று கடந்த 22-ம் தேதி டெல்லி போலீசார் முன் தினகரன் நேரில் ஆஜரானார். அன்றிலிருந்து, தொடர்ந்து நான்கு நாட்களாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் டிடிவி தினகரன் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடன் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தினகரனும் அவரது நண்பரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

More News

முழு அடைப்பு போராட்டம் மக்களுக்கு மட்டும்தானா?

விவசாயிகளுக்காக திமுக தலைமையில் அரசியல் கட்சிகள் நடத்திய இன்றைய முழு அடைப்பு போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்தது

தினகரனை யார் என்றே தெரியாது! முன்னுக்கு பின் முரணாக பேசும் சுகேஷ் சந்திரசேகர்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்தது குறித்த வழக்கு ஒன்றில் டிடிவி தினகரனிடம் நான்காவது நாளாக இன்று விசாரணை நடந்து வருகிறது.

டிடிவி தினகரன் கைது எப்போது? நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் பதில்

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை. ஓபிஎஸ் முக்கிய தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் முதல்வர் பதவியேற்று ஆட்சியை நடத்தி கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரத்தில் பிடிபட்ட சென்னை சென்ட்ரல் ரயில் வெடிகுண்டு மிரட்டல்காரர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று ஒரு மிரட்டல் கடிதம் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்ததாக சற்று முன்னர் பார்த்தோம்.