டிடிவி தினகரன் மகளுக்கு நிச்சயதார்த்தம்: காங்கிரஸ் பிரமுகர் மகனை மணக்கிறார்!

தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் டிடிவி தினகரன். இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளையே எதிர்த்து சுயேச்சையாக ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டிடிவி தினகரனின் மகளுக்கும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் மகனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் மகள் ஜெயஹரினிக்கும், காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் மகன் ராமநாதன் வாண்டையார் அவர்களுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி புதுவையில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் நடந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, சிறையில் இருந்தபடியே இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார் என்றும், அவர் சிறையிலிருந்து விடுதலையான உடன் அவரது தலைமையில் இந்த திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக இருப்பதாக டிடிவி தினகரன் மீது ஒரு கருத்து இருந்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி பிரமுகருடன் சம்பந்தமும் செய்யவிருப்பதால், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது அமமுக கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கந்தசஷ்டி கவசம் விவகாரம்: வைரலாகும் கேப்டன் விஜயகாந்தின் வீடியோ

சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்தசஷ்டிகவசம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை பதிவு செய்தது என்பதும் இந்த வீடியோவுக்கு இந்து மத ஆதரவாளர்கள், முருக பக்தர்கள் உள்பட பலர் கண்டனம்

இந்த மாத்திரையால் தான் குணமானேன்: விஷாலின் பரபரப்பு வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் மற்றும் அவரது தந்தை ஜிகே ரெட்டி ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து குணமாகினர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20வது எம்.எல்.ஏ: இம்முறை யார் தெரியுமா?

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

இதுதான் என்னுடைய கடைசி வீடியோ: தற்கொலைக்கு முயன்ற தமிழ் நடிகையால் பரபரப்பு?

விஜய், சூர்யா நடித்த 'பிரெண்ட்ஸ்' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்யப்போவதாக பதிவு செய்து செய்துள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் 4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: சென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக 6000ஐ தாண்டியுள்ள நிலையில் இன்று 4வது நாளாவும் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது