சர்கார்' படத்தில் இலவச டிவியை ஏன் எரிக்கவில்லை?... டிடிவி தினகரன் கேள்வி

  • IndiaGlitz, [Friday,November 09 2018]

'சர்கார்' திரைபடத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மறுதணிக்கையும் செய்யப்பட்டுவிட்ட நிலையிலும் இந்த பிரச்சனை குறித்து அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 'சர்கார்' விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அணுகுமுறை தவறானது என்றும், தமிழகத்தில் இருகும் பிரச்சினைகளை திசை திருப்பவே ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் 'சர்கார்' திரைப்படம் நடுநிலையுடன் எடுக்கப்படவில்லை என்றும் இந்த படத்தில் மிக்ஸி, கிரைண்டரை எரிப்பவர்கள் இலவச தொலைக்காட்சியையும் எரித்து இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்போம் என்றும் மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் 'சர்கார்' திரைப்படத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு ஆளுங்கட்சியினர் உதவுகின்றனர் என்றும் தினகரன் கூறியுள்ளார்.