close
Choose your channels

தூத்துகுடி துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

Tuesday, May 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடந்து வரும் நிலையில் இன்றைய போராட்டம் வன்முறையாக வெடித்து பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தடியடி, கண்ணீர்ப்புகை ஆகியவை பயனளிக்காததால், போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் முதல்கட்டமாக ஒருவர் மட்டுமே பலியானதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் தற்போது இந்த துப்பாக்கி சூட்டால் மூன்று பேர் பலியாகியிருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது. மரணம் அடைந்த ஒருவரின் பெயர் அந்தோணி என்றும், மற்ற இரண்டு பேர்களின் விபரங்கள் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவ வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துல்ள்ளது. ஆனால் சற்றுமுன் பேட்டியளித்த டிஜிபி ராஜேந்திரன், 'தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.