சொந்த வீட்டில் நகை திருடிய மனைவி: அவமானத்தில் கணவர் தற்கொலை

  • IndiaGlitz, [Wednesday,April 08 2020]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் துறைமுகத்தில் பணிபுரிந்து வரும் வின்சென்ட் என்பவரின் மனைவி ஜான்சிராணி சொந்த வீட்டிலேயே 120 பவுன் நகைகளை திருடியதாவும் அதன்பின் போலீஸ் விசாரணையில் அவர் மாட்டிகொண்டு கைது செய்யப்பட்டதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

இந்த நிலையில் அதிக செலவுகள் செய்ய பேராசைப்பட்டு சொந்த வீட்டிலேயே தனது மனைவி திருடியதாலும் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டதாலும் அவரது கணவர் வின்சென்ட் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வின்சென்ட் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டடுள்ளார். தனது மனைவியே சொந்த வீட்டில் நகை திருடி, போலீசில் மாட்டிக் கொண்டு கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளானதால் வின்செண்ட் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

தமிழகத்தில் கொரோனாவுக்கு 8வது பலி: 45 வயது நபர் உயிரிழந்ததால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று வரை 6 பேர் மட்டுமே பலியாகி இருந்த நிலையில் நேற்று மாலை பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சென்னை

கீழக்கரை ஊரையே பதட்டமாக்கிய கொரோனா பாதித்த குடும்பம்: பரபரப்பு தகவல்

கீழக்கரையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பலியான ஒருவரின் குடும்பம், அந்நகரையே அச்சுறுத்தியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது கிடைக்காததால் விபரீத செயலில் ஈடுபட்ட மனோரமா மகன்: அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்த பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு

நாட்டு மக்களுக்காக வைரமுத்து செய்த உதவி!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் தமிழக அரசுக்கும் உதவிகளும் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே

12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!

இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 12 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசுஅனுமதி அளித்துள்ளது.