close
Choose your channels

காதலனை அறிமுகம் செய்த பிரபல சீரியல் நடிகை!

Friday, January 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஒருவர் தனது காதலரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் செய்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

வாயை மூடி பேசவும்’ ’இரும்புக்குதிரை’ ’இந்திரஜித்’ ’மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் ’ரோஜா’ ’மின்னலே’ ’நாயகி’ ’திருமகள்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். இவர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நக்ஷத்ராவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகி வந்தனர் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் அதிகரித்துக் கொண்டே வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் தனது காதலனை அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியபோது ’இன்ஸ்டாகிராமில் நாம் அறிமுகமானபோது டீன் ஏஜில் இருந்தேன். அதன் பிறகு என்னுடைய பாலோயர்கள் எல்லாம் எனக்கு ஒரு புதிய உலகத்தை கற்றுக் கொடுத்தனர். எனது தொழிலில் நான் மிகுந்த சிரத்தையுடன் இருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் என்னை ரசிகர்கள் வளர்த்து வந்தார்கள். ரசிகர்கள் எனது மிகப்பெரிய பலம். அதற்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். நீங்கள் அனைவரும் என் வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத பகுதியாக மாறி விட்டீர்கள்

இந்த நிலையில் எனது சிறிய உலகத்தில் என்னுடைய அன்புக்குரியவரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்தான் அந்த அன்புக்குரியவர்’ என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நக்ஷத்ராவுடன் அவருடைய காதலர் ராஹா என்பவர் இருக்கிறார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.