யூடியூபில் வருமானத்தை அள்ளும் டிவி நட்சத்திரங்கள்!

  • IndiaGlitz, [Monday,September 20 2021]

யூடியூப் என்பது பொழுதுபோக்கு வீடியோ பார்க்கும் தளம் என்பதையும் தாண்டி தற்போது அது வருமானத்தை கொட்டிக் கொடுக்கும் தளமாக மாறி விட்டது. பலர் யூ டியூப்பில் சேனல் தொடங்கி தங்களுக்கு தெரிந்ததை வீடியோவாக வெளியிட்டு வருமானத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தனக்கு யூடியூபில் மாதம் 4 லட்ச ரூபாய் வருமானம் வருவதாக தெரிவித்து இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் பல்கலைக்கழகத்திற்கு ஆன பாடங்களை எடுத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரியை விட நம்ம ஊர் டிவி நட்சத்திரங்கள் அதிகம் யூடியூப் சேனல் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். குறிப்பாக விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா மாதம் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை தனது யூடியூப் சேனல் மூலம் வருமானம் பெறுகிறார் என கூறப்படுகிறது. அவரது யூடியூப் சேனலில் சப்பாத்தி செய்வது எப்படி? சாப்பிடுவது எப்படி? சட்னி அரைப்பது எப்படி? என்பதை விலாவாரியாக காண்பிக்கிறார். அவருக்கு எதையெடுத்தாலும் கண்டண்ட் தான் என்பது குறிப்பிடதக்கது. சமீபத்தில் கூட அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த வீடியோ லட்சக்கணக்கில் பார்வையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மற்றொரு தொகுப்பாளினியான மணிமேகலையும் தனது கணவருடன் சேர்ந்து வித்தியாசமான இடங்களுக்கு சென்று வித்தியாசமான வீடியோக்களை பதிவு செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இதேபோல் யூடியூபில் சின்ன திரையுலகினர் பலர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சரத்குமார் - சுஹாசினி நடிக்கும் புதிய படம்: முழு விபரங்கள்!

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சுஹாசினி இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் சில வெளியாகியுள்ளன.

சீயான் விக்ரமின் 'மகான்' படத்தின் மாஸ் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த திரைப்படம் 'மகான்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் தெரிந்ததே

த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷனுடன் சமந்தா: வைரல் புகைப்படங்கள்!

முன்னணி நடிகைகளான த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உடன் எடுத்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான

பிக்பாஸ் டைட்டில் வின்னரை மறுமணம் செய்ய போகிறாரா நடிகை மேக்னாராஜ்?

பிக்பாஸ் டைட்டில் வின்னரை நடிகை மேக்னா ராஜ் மறுமணம் செய்யப் போவதாக பரவி வரும் வதந்தியால் கன்னட திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆறு விருதுகளை அள்ளிக்குவித்த சூர்யாவின் 'சூரரைப்போற்று' 

பிரபல நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த திரைப்படத்தை திரையுலகினர் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்