பொங்கல் தினத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. குவியும் விமர்சனங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் திருநாள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
பொங்கல் திருநாள்!
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ஆண்டாண்டு காலமாக சித்திரை ஒன்றாம் தேதியை தான் தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில் தை ஒன்றாம் தேதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ் புத்தாண்டு என்று தெரிவித்துள்ளதை அடுத்து நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
பொங்கல் திருநாள்!
— TVK Vijay (@tvkvijayhq) January 13, 2025
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான… pic.twitter.com/cKWbdjZsXU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments