close
Choose your channels

அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எதிராக டுவிட்...! சித்தார்த்துக்கு ஆதரவு தரும் நெட்டிசன்கள்...!

Tuesday, April 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீங்கள் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக மக்களை விலை கொடுத்து கொலை செய்கிறீர்கள் என இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை டேக் செய்து டுவீட் போட்டுள்ளார் நடிகர் சித்தார்த்.

அண்மையில் தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவது குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கு இணையவழியாக பதிலளித்த இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியிருப்பதாவது,
"இத்தருணங்களில் நீங்கள் கூறும் மதிப்பு மிக்க அறிவுரைகளையும், ஒத்துழைப்புகளையும் உங்களுடைய காங்கிரஸ் கட்சி பின்பற்றியிருந்தால், வரலாறு இன்னும் மேம்படுத்தி பேசியிருக்கும்" என்று டுவீட் பதிவிட்டு கூறியிருந்தார். இக்கடிதமானது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை குற்றம் கூறும் வகையிலே அமைந்திருந்தது.

இந்தநிலையில் ஹர்ஷவர்தனின் கடிதத்தை குறிப்பிட்டு, நடிகர் சித்தார்த் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

"நீங்கள் கோவிட் போராளி அல்ல டாக்டர் ஹர்ஷ்வர்தன். உண்மையில் நீங்கள் கோவிட்டின் கூட்டாளி" என பதிவிட்டுள்ளார். நீங்கள் தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, விலை கொடுத்து மக்களை கொலை செய்து வருகிறீர்கள். அதே போல் மதகூட்டங்கள் மூலம் மக்களை திரளவைத்து அங்கேயும் மக்களை கொல்கிறீர்கள். வரலாறுகள் இதை மறக்கவும் செய்யாது, மன்னிக்கவும் செய்யாது. வெட்கம் " என்பதை பதிவிட்டு அமைச்சரை டேக் செய்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் இந்த டுவீட்டுக்கு இணையவாசிகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.அதுமட்டுமில்லாமல் பாலிவுட் திரைபிரபலங்கள் பலரை டேக் செய்து, "சித்தார்த்தைப் போல முதுகெலும்பு உடையவர்களாக இருங்கள்" என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த டுவீட்கள் சமீபத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You are not a Covid warrior @drharshvardhan. You in fact are an ally of Covid.

Keep on murdering people in the name of winning elections at all cost. Then murder more people with moronic overcrowded religious gatherings.

History will never forget it forgive you. #Shame#SHAME https://t.co/3wi9Rkcao7

— Siddharth (@Actor_Siddharth) April 19, 2021

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.