close
Choose your channels

கொரோனாவுக்கு பலியான நர்ஸ் பணியாற்றிய இரட்டை சகோதரிகள்: 

Sunday, April 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சுகளாக பணியாற்றி வந்த இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் நர்சுகளாக பணியாற்றி வந்தவர்கள் கேட்டி டேவிஸ் மற்றும் எம்மா டேவிஸ். இரட்டையர்களான இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் நர்சிங் படித்து ஒரே மருத்துவமனையில் நர்ஸ் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட போதிலும் அதை புன்னகையோடு ஏற்று கொரோனா நோயாளிகளுக்கு அன்புடன் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென இருவருக்கும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கேட்டி, எம்மா டேவிஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்த நாட்களில் மரணமடைந்தார்கள். இரட்டை சகோதரிகளாக பிறந்து ஒரே கல்லூரியில் படித்து ஒரே மருத்துவமனையில் வேலைபார்த்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மரணம் அடைந்தது இங்கிலாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சகோதரிகளின் மரணம் குறித்து இவர்களது மற்றொரு சகோதரி ஜோயி டேவிஸ் கூறுகையில், “இருவரும் இந்த உலகிற்கு ஒன்றாகவே வந்தனர். இப்போது ஒன்றாகவே உலகைவிட்டு போய்விட்டனர். பிறப்பும், இறப்பும் அவர்களை பிரிக்கவில்லை” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos