close
Choose your channels

டுவிட்டர் ஹேஷ்டேக்கிற்கு இன்று 10வது பிறந்த நாள்

Thursday, August 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டுவிட்டரில் எதற்கெடுத்தாலும் # என்னும் ஹேஷ்டேக் செய்வது கடந்த சில வருடங்களாக டிரெண்ட் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த ஹேஷ்டேக்கிற்கு இன்று 10 வயது ஆகிறது. ஆம், கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி தான் முதன்முதலில் ஹேஷ்டேக்கை டுவிட்டர் அறிமுகம் செய்தது.
ஹேஷ்டேக் தோன்றி பத்து வருடங்கள் ஆனதை அடுத்து டுவிட்டர் இன்று #Hashtag10 என்னும் புதிய ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளது. இந்த ஹேஷ்டேக் தற்போது உலக அளவில் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி # என்னும் எமோஜியையும் இன்று டுவிட்டர் அறிமுகம் செய்துள்ளது.
இந்த # நாள் ஒன்றுக்கு 125 மில்லியன் முறை உலகம் முழுவதிலும் உள்ள டுவிட்டர் பயனாளிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த பத்து ஆண்டுகளில் உலகின் மிக பிரபலமான பத்து ஹேஷ்டேக்குகளில் #IceBucketChallenge, ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சனின் #HeForShe, ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.