நீண்ட இடைவெளிக்கு பின் பிரபுவை சந்தித்த உடன் நடித்த நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,January 24 2024]

நடிகர் பிரபுவுடன் நடித்த இரண்டு நடிகைகள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இளைய திலகம் பிரபுவுடன் நடித்த நடிகைகள் சீதா மற்றும் ஜெயஸ்ரீ. நடிகை சீதா ’குரு சிஷ்யன்’ திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன்பின்னர் ’வெற்றி மேல் வெற்றி’ ‘பொண்ணு பாக்க போறேன்’ போன்ற படங்களிலும் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.

அதேபோல் பிரபு நடித்த ’ஆனந்த்’ திரைப்படத்தில் ராதா, ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை விஜி சந்திரசேகர் இல்ல திருமண விழாவில் பிரபு கலந்து கொண்ட நிலையில் அதே திருமண விழாவிற்கு கலந்து கொள்ள வந்த சீதா மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் பிரபுவை சந்தித்தனர். மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்ட நிலையில் இந்த புகைப்படத்தை சீதா தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

அதேபோல் ஜெயஸ்ரீயும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த நீண்ட இடைவேளைக்கு பின்னர் பிரபுவுடன் நடித்த இரண்டு நடிகைகள் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

திருமணமான அவருடன் டேட்டிங் இல்லை: வேறொருவரை காதலிக்கிறேன்: கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் 'அவருக்கு திருமணம் ஆகிவிட்டது

கடும் குளிர்.. நோ மேக்கப்.. ரிஷிகேஷில் நடிகை ரம்யா பாண்டியன்..!

 நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ் சென்று உள்ள நிலையில் அங்கு கடுங்குளிரில் மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

சிம்புவுக்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோன்? இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் தீபிகா படுகோன் என்றும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

5வது மாதத்தில் வளைகாப்பு.. கணவருடன் ஜாலியாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகையின் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களை நடித்து வரும் நடிகை ஒருவர் தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு தினத்தில்   கணவருடன் கைகோர்த்து ஜாலியாக

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படத்தில் 2 ஹீரோக்கள்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.