அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு: கைது செய்யப்படுவாரா?

  • IndiaGlitz, [Tuesday,May 14 2019]

இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசிய பேச்சு நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரவக்குறிச்சியில் இன்று கமல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொது இடத்தில் பிரச்சினையை உருவாக்கியது என கமல் மீது 153A, 295A என இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராமகிருஷ்ணன் அளித்துள்ள இந்த புகாரில், ''கமல்ஹாசன் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் அவர்களுடைய ஓட்டுக்களை பெறுவதற்காக இந்து மக்களின் மனம் புண்படும்படி பேசியுள்ளதாகவும், அவரது பேச்சால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரின் மனம் வேதனை அடைந்துள்ளதாகவும், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகை உணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு அவர் பேசியுள்ளதாகவும், எனவே கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் கமல்ஹாசன் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கர் செய்த புதிய முயற்சி!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' திரைப்படம் முதலில் லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்தது.

பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து குதித்த ஜிஎஸ்டி கண்காணிப்பாளர்!

மும்பை பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கமல் மீது டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு: கிரிமினல் நடவடிக்கை எடுக்க மனு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலைக்கு 996, உடலுறவுக்கு 669: அலிபாபா நிறுவனரின் ஐடியா!

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்று அலிபாபா. சீன தொழிலதிபர் ஜாக் மா நிறுவனராக உள்ள இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு அபார வளர்ச்சியை பெற்று வருகிறது

பேசுவதற்கு முன் சிந்தித்து பேச வேண்டும்: கமல்ஹாசனுக்கு பிரேமலதா அறிவுரை

இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் பேசிய கருத்து சர்ச்சைக்குரியதாக மாறி இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது. கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, புகழேந்தி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள்