close
Choose your channels

ஒரே படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் பிரபல இயக்குனர்!

Wednesday, February 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனருடன் பிரபல இயக்குனர் ஒருவர் இணைய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரையுலக இயக்குனர்களில் வித்தியாசமான மற்றும் தரமான படங்களை கொடுத்து வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் என்பது தெரிந்ததே. இவர் இயக்கிய ’ஆடுகளம்’ மற்றும் ’அசுரன்’ ஆகிய திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் பிரபல இயக்குனர் அமீர் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரபல இயக்குனர்கள் இணையும் இந்தப் படம் குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் தகவல் வெளிவந்துள்ளதால் திரையுலக ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வெற்றிமாறன், அமீர் இருவரும் தனித்தனியே சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளனர் என்பதும், நிலையில் ஒரே படத்தில் இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய ‘அசுரன்’ படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.