ஒரே நேரத்தில் ரீமேக் ஆகும் 2 மணிரத்னம் படங்கள்

  • IndiaGlitz, [Saturday,April 09 2016]

மணிரத்னம் இயக்கிய வெற்றி திரைப்படமான 'ஓகே கண்மணி' படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகிறது என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது மற்றுமொரு மணிரத்னம் படமும் பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த 1988ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா நடிப்பில் வெளியான 'அக்னி நட்சத்திரம்' படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் பிஜாய் நம்பியார் ரீமேக் செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சமீபத்தில் மணிரத்னம் அவர்களை பிஜாய் நம்பியார் சந்தித்து அனுமதி மற்றும் ஆசியை பெற்றதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரபு மற்றும் கார்த்திக் கேரக்டர்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் விக்ரம்பிரபு நடிப்பில் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிஜாய் நம்பியாரின் ரீமேக் படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கோ 2' ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் சரத் இயக்கிய 'கோ 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக சற்று முன்னர்..

'வெற்றிவேல்' டிரைலர் விமர்சனம்

'படிக்கலைன்னாலும் நானும் வாத்தியார்தான். அவங்க பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குறாங்க..நான் பயிருக்கு...

2.0 படத்தின் வில்லன் அக்சயகுமார்

விரைவில் வெளியாகிறது 'தெறி'யின் போனஸ்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் தெறியாக வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின்...

விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை 6.30க்கு ஒரு சர்ப்ரைஸ்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், நடித்துள்ள 'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ...