ஒரே புகைப்படத்தில் 2 லேடி சூப்பர் ஸ்டார்.. லட்சக்கணக்கில் குவியும் லைக்ஸ்..!

  • IndiaGlitz, [Monday,March 11 2024]

ஒரே புகைப்படத்தில் இரண்டு லேடி சூப்பர் ஸ்டார் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில், அவருக்கு முன்னரே நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் இடையில் சில ஆண்டுகள் இவர் திரையுலகில் இருந்து விலகி அதன் பின்னர் மீண்டும் கடந்த 10 ஆண்டுகளாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக தமிழில் ‘அசுரன்’ திரைப்படத்தில் நடித்த அவர் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ மற்றும் ‘விடுதலை 2’ படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் இணைந்த புகைப்படத்தை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 20 வருடங்களுக்கு மேல் இருவரும் திரை உலகில் இருந்தாலும் இதுவரை இருவரும் இணைந்து நடித்ததில்லை என்பதும் ஒரு திரைப்பட விழாவில் கூட இருவரும் சேர்ந்து கலந்து கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இருவரும் இணைந்த இந்த புகைப்படத்தை மஞ்சு வாரியர் பகிர்ந்து உள்ளதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற 'ஓப்பன்ஹெய்மர்'.. விருது பெற்றவர்களின் முழு விவரங்கள்..!

96 வது ஆஸ்கர் விருது இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான 'ஓப்பன்ஹெய்மர்' என்ற திரைப்படம் 7 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

கூத்தாடிகளை கொண்டாட வேண்டாம்.. விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கலாம்: அரசியல் கட்சி தலைவர்..!

கூத்தாடிகளை கொண்டாட வேண்டாம் என்று கூறிய அரசியல் கட்சி தலைவர், இதை சொல்வதால் விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கலாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.100 கோடி.. ரூ.150 கோடி.. அடுத்தடுத்து 2 மலையாள படங்களின் சாதனை வசூல்.. ஏக்கத்தில் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில்  மலையாள திரை உலகில் அடுத்தடுத்து இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் 100 கோடி மற்றும் 150

அட்லியின் அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? குரு ஷங்கரை முந்திவிட்டரா?

அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்த நிலையில் அட்லியின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மெகா ஸ்டார் படத்தில் இரட்டை வேடத்தில் த்ரிஷா ? இதுதான் முதல்முறையா?

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா தற்போதும் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் பிசியான நடிகையாக உள்ளார்