'இரட்டை இலை' முடக்கம். சுயேட்சை வேட்பாளர்களாக மாறிய டிடிவி தினகரன் - மதுசூதனன்

  • IndiaGlitz, [Thursday,March 23 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக, அவர் மறைந்த ஒருசில நாட்களில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக உடைந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் இரு அணிகளும் போட்டியிடுவதால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தன.

இதுகுறித்த விசாரணை நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. இரு அணிகளின் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தனர். இரு அணிகளின் வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம், நேற்று நள்ளிரவு 'இரட்டை இலை' சின்னத்தை' முடக்குவதாக அறிவித்தது.

அதுமட்டுமின்றி அதிமுக என்ற கட்சியின் பெயரை இரு அணிகளும் பயன்படுத்த கூடாது என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக இரு அணியின் ஆர்.கே.நகர் வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள். இன்று காலை இரு அணிகளும் தங்கள் சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

More News

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் விழாவில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், தனது அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு கொடுப்பதற்காக 150 புதிய வீடுகளை கட்டியுள்ளது...

'நான் பிழைப்பேனா? தனுஷ் கேட்பது யாரிடம்?

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஐதராபாத் மருத்துவமனையில் த்ரிஷா அனுமதியா? தாயார் உமாகிருஷ்ணன் விளக்கம்

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது கூட இளம் நடிகைகளுக்கு போட்டியாளராக உள்ளார். இவர் தற்போது 'மோகினி', 'சதுரங்க வேட்டை 2', 'கர்ஜனை', '1818', '96' போன்ற படங்களில் நடித்து வருகிறார்...

இரட்டை இலை முடக்கம். ஓபிஎஸ்-டிடிவி தினகரன் கருத்து

ஒன்றுபட்ட அதிமுகவின் மக்கள் செல்வாக்கு மிகுந்த சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக நேற்று நள்ளிரவு தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த இரு அதிமுக அணிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது...

இனிமேல் தான் ஆட்டமே இருக்கு. பவர்பாண்டி டிரைலரில் தனுஷ்

தனுஷ் இயக்கியுள்ள முதல் படமான 'பவர்பாண்டி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.