close
Choose your channels

'ஏகே 62' படத்திற்கு இரண்டு இயக்குனர்களா? வேற லெவல் திரைக்கதை என தகவல்

Sunday, February 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க உள்ள ’ஏகே 6’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’ஏகே 62’ திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்றும் இது குறித்த முறையான அறிவிப்பு லைகா நிறுவனத்திடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தின் திரைக்கதையை பிரபல இயக்குனர் பிஎஸ் மித்ரன் எழுத விருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த படத்தின் திரைக்கதை வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு சூப்பர் ஹிட் இயக்குனர்கள் ’ஏகே 62’ படத்தின் இணைவதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ‘ஏகே 62’ படத்தில் மகிழ்திருமேனி, பிஎஸ் மித்ரன் ஆகிய இருவரும் பணிபுரிவார்களா? என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.