உறவினர்களே அவமிதிப்பு… கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த முஸ்லீம் இளைஞர்கள்!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் அதுவும் இந்து முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்த காட்சி பார்ப்போரை கண்கலங்கை வைத்துள்ளது. இந்தச் சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என அந்த ஊர் மக்களும் பாராட்டி உள்ளனர்.

தெலுங்கானாவின் பெடா கோடப்சல் அடுத்த கட்டேபள்ளி எனும் கிராமத்தில் வசித்தவர் மொகுலையா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் உறுதியானதை அடுத்து ஒருசில தினங்களில் சிகிச்சை பலனின்றி மொகுலையா உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவரின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அம்மருத்துவமனை நிர்வாகம் இவரது உறவினருக்கு தகவல் கொடுத்தது.

ஆனால் மொகுலையாவின் உடலைப் பெற்றுக் கொள்ளவோ அவரை அடக்கம் செய்யவோ உறவினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டும் பணி செய்துவரும் முஸ்லீம் இளைஞர்கள் ஷாஃபி மற்றும் அலி எனும் இருவரும் மொகுலையாவின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்துச் சென்று பன்சுவாடா எனும் பகுதியில் உள்ள மயானத்தில் வைத்து இந்து மதச் சடங்குகளைப் பின்பற்றி அடக்கம் செய்தனர். இந்தக் காட்சிகளைப் பார்த்த அந்த ஊர் மக்கள் மத நல்லிணக்கத்திறகு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று இளைஞர்களை பாராட்டி வருகின்றனர்.