ஐபிஎல் தொடக்க விழாவில் 2 முன்னணி தமிழ் நடிகைகள்?


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் திருவிழா தொடங்க இருக்கும் நிலையில் வரும் 31ஆம் தேதி தொடக்க விழாவுடன் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தொடக்க விழாவில் இரண்டு முன்னணி தமிழ் நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் தொடரின் தொடக்க விழா வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரபல தமிழ் நடிகைகளான தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
மேலும் இந்த தொடக்க விழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 31ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும் தொடக்க விழாவுக்கு பின் குஜராத் மற்றும் சென்னை அணிகள் இந்த மைதானத்தில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே மைதானத்தில் தான் தற்போது நடைபெற்று வரும் மகளிர் ஐபிஎல் போட்டிக்கான தொடக்க விழாவும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமன்னா, ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி பாலிவுட் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களும் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.