ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: டெல்லி மருத்துவமனையின் அவலம்!

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை அளித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

டெல்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனை இந்தியாவிலேயே அதிக வசதி கொண்ட மருத்துவமனையாக உள்ளது. இங்கே கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் 1500 படுக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அட்மிட் ஆவதால் வேறு வழியின்றி ஒரு சில படுக்கைகளில் இரண்டு கொரோனா நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் இந்த மருத்துவமனையில் நோயாளிகளை சேர்ப்பதற்காக புரோக்கர்களிடம் பணம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து கண்டுகொள்ளப்படவில்லை என்றும் இந்த மருத்துவமனையில் தங்கள் உறவினரை அனுமதித்த ஒருவர் பேட்டி அளித்துள்ளார் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.