சமந்தா கேரக்டரில் நடிக்க மறுத்த 2 முன்னணி நாயகிகள்!

  • IndiaGlitz, [Thursday,March 21 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர் நடிகை சமந்தா. இந்த கேரக்டரில் நடிக்க ஏற்கனவே இரண்டு முன்னணி நடிகைகளை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அணுகியதாகவும், அவர்கள் இந்த கேரக்டரில் நடிக்க மறுக்கவே மூன்றாவதாக சமந்தாவுக்கு இந்த கேரக்டர் கிடைத்துள்ளதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

இரண்டு முன்னணி நாயகிகள் மட்டுமின்றி சமந்தா இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதை அவருடைய கணவர் நாக சைதன்யாவே ஆச்சரியமடைந்தாராம்.

மேலும் தியாகராஜன் குமாரராஜா படம் என்றாலே அதிக டேக்குகளில்தான் ஒரு காட்சி ஓகே ஆகும் என்ற நிலை இருக்குமாம். ஆனால் சமந்தா அதிகபட்சம் மூன்றே டேக்குகளில் தனது காட்சியை ஓகே செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில், மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 

More News

போலீஸ் தடியடி எதிரொலி: 'தளபதி 63' படப்பிடிப்பில் திடீர் மாற்றம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

11 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் த்ரிஷா

பிரபல இயக்குனர் ராதாமோகன் கடந்த 2008ஆம் ஆண்டு இயக்கிய 'அபியும் நானும்' திரைப்படத்தில் நடித்த த்ரிஷா, மீண்டும் 11 வருடங்களுக்கு பின் தற்போது ஒரு படத்தில் ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

துருவ் நடிக்கும் 'ஆதித்ய வர்மா'வில் இணைந்த பிரபல இயக்குனர்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் கவுதம் மேனன் விக்ரம் மகன் துருவ் நடித்து வரும் 'ஆதித்ய வர்மா' படத்தில் இணைந்துள்ளார்.

நரேந்திரமோடியின் பேரன் ராகுல்காந்தியா? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு 

முன்னாள் முதல்வர்களும், ஆளுமை உள்ள தலைவர்களுமான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத இந்த தேர்தலில் பல காமெடிகள் நடந்து வருகிறது.

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கடந்த ஆண்டே தகவல் வந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.