close
Choose your channels
Kaatrin Mozhi

சமந்தாவின் 'யூடர்ன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

Friday, September 7, 2018 • தமிழ் Comments

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வரும் முன்னணி நடிகையான சமந்தா நடித்த 'சீமராஜா' மற்றும் 'யூடர்ன்' ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் அதாவது வரும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

சீமராஜா' படத்தின் புரமோஷனில் இருந்தே அந்த படம் வெற்றிப்படம் என உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது 'யூடர்ன்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான 'யூடர்ன்' திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பிற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 128 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைமை கொண்டுள்ளது.

சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பவன்குமார் இயக்கியுள்ளார். பூமசந்திர தேஜஸ்வா இசையில்  நிகேத் பொமி ஒளிப்பதிவில் சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.