ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Friday,November 05 2021]

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை நடிகை திரிஷா பெற்றள்ளார். இதனால் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் நடிகை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு மற்றும் சினிமா துறையில் சிறந்து விளங்குவோர் எனப் பலரும் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பித்து வருகின்றனர். இப்படி விசா பெறும் பிரபலங்கள் 10 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் குடிமகன்களாகவே கருதப்படுவர்.

மேலும் பாதுகாப்பு சோதனைகளும் எளிமையாக்கப்பட்டு அடிக்கடி ஐக்கிய அமீரகம் செல்வதற்கு இந்த விசா உதவுகிறது. பாலிவுட் சினிமாவில் சஞ்சய் தத், ஷாருக்கான், போனி கபூர், அர்ஜுன் கபூர் மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், பிருத்விராஜ் சுகுமாரன் எனப் பலரும் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். சமீபத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடாலிவிற்கும் மலையாள மற்றும் தமிழ் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு இந்த கோல்டன் விசா கிடைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிக்கட்டி பறந்துவரும் நடிகை திரிஷா கோல்டன் விசாவை பெற்றுள்ளார். இதுகுறித்து, “அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்“ என்று நடிகை திரிஷா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

More News

மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தல அஜித்: வைரல் வீடியோ!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'மரக்கார்' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அங்கு திடீர் விசிட் அடித்த தல அஜித் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் தீபாவளி கொண்டாட்டம் : வைரல் வீடியோ

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலரும் விக்னேஷ் சிவனுடன் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடிய காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய திருப்பத்தூர் எஸ்பி: வைரல் புகைப்படங்கள்!

இந்தியா முழுவதும் நேற்று மிகவும் சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மலை வாழ் மக்களுடன் திருப்பத்தூர் எஸ்பி டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்கள் தீபாவளி கொண்டாடியதன் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

இந்த வார தலைவர் போட்டி: கரவை மாட்டை கவிழ்த்த போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில் அடுத்த வாரம் தலைவர் போட்டிக்கான டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டத்தில் கண்கலங்கிய பிரியங்கா, ராஜூ!

பிக் பாஸ் வீட்டில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெறுகிறது என்பதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பிக்பாஸ் போட்டியாளர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது