உதயநிதி-அருண்ராஜா காமராஜ் படத்திற்கு கலைஞர் புத்தகத்தின் டைட்டில்!

  • IndiaGlitz, [Saturday,October 16 2021]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்திற்கு கலைஞர் எழுதிய புத்தகத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நடிகரும் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண் ராஜா இயக்கத்தில் திரைப்படம் ஒன்று கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் உதயநிதியுடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர். யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையில், தினேஷ்குமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார் என்பதும் போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த மோஷன் போஸ்டரில் இந்த படத்தின் டைட்டில் ’நெஞ்சுக்கு நீதி’ என்று வைக்கப்பட்டுள்ளது. நெஞ்சுக்கு நீதி என்பது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி எழுதிய புத்தகத்தின் டைட்டில் என்பது அனைவரும் அறிந்ததே.