துபாயில் சிஎஸ்கே ரசிகர்களுடன் உதயநிதி-இன்பநிதி: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,October 16 2021]

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அந்த அணிக்கு 20 கோடி பரிசு வழங்கப்பட்டது என்பதும் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட டூபிளஸ்சிஸ் மற்றும் ஆரஞ்சு கேப் பெற்ற ருத்ராஜ் ஆகியோர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியின் வெற்றியை சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் இந்த போட்டியை தமிழ் திரைப்பட நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி தனது மகன் இன்பநிதியுடன் துபாய் மைதானத்தில் நேரில் கண்டு ரசித்தார். நேற்றைய போட்டியின் நேரலையின்போது உதயநிதி ஸ்டாலின் போட்டியை கண்டு ரசிப்பது குறித்த காட்சிகள் இடம் பெற்றது.

இந்த நிலையில் துபாய் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுடன் உதயநிதி மற்றும் இன்பநிதி எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'நானே வருவேன்' படத்தின் மாஸ் போஸ்டர்கள்: புதிய அப்டேட் தந்த தயாரிப்பாளர்!

தனுஷ் நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'நானே வருவேன்' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும்

தல அஜித்தின் 'சிட்டிசன்' இயக்குனரின் அடுத்த படம்: டிரைலர் ரிலீஸ்!

தல அஜித் நடித்த 'சிட்டிசன்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஷரவணன் சுப்பையா இயக்கியுள்ள 'மீண்டும்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ இணையதளங்களில்

பிரமிக்க வைக்கும் சுந்தர்பிச்சையின் தினசரி வழக்கம் பற்றி தெரியுமா?

உலகிலுள்ள கோடிக்கணக்கான மனிதர்களுக்கு இடையில் சாதனையாளர்கள்

தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட் கலைப்புலி எஸ்.தாணு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' மற்றும் கார்த்திக் நரேன் இயக்கும் 'மாறன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

தோனியை வித்தியாசமாகப் பாராட்டிய கல்லூரி மாணவி… ரசிகர்கள் வரவேற்பு!

சென்னை சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனியின் உருவப்படத்தை கோலமாவு கொண்டு