close
Choose your channels

விஷ்ணு விஷாலுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்

Monday, December 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ள ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒன்று 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரின் நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது.

ஆம், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்;' படத்தை ரிலீஸ் செய்கிறது. இதற்கு முன் விஷ்ணு நடித்த 'நீர்ப்பறவை' படத்தை ரிலீஸ் செய்து இந்நிறுவனம், தற்போது மீண்டும் விஷ்ணு நடித்த படத்தை ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ஜெயண்ட் மூவீஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்வது உறுதியாகிவிட்டதால் இந்த படத்தின் புரமோஷன் இனிவரும் நாட்களில் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணுவிஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். லியோ ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு லட்சுமண் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.