அனிதாவிற்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு!
கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. தற்போது அனிதா குடும்பத்தினர் அவருடைய பெயரால் ஒரு நூலகம் நடத்தி இன்னொரு அனிதா உருவாகமல் இருக்க உதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அனிதா இல்லத்திற்கு சென்று அவருடைய புகைப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அனிதாவின் நூலகத்திற்கு தனது தந்தையும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய புத்தகங்களையும் அவர் பரிசாக வழங்கினார். இந்த விலைமதிப்பில்லா புத்தகங்கள் அப்பகுதியில் இருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு. அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன்.
பாஜக-அதிமுக அரசுகள் புகுத்திய நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட தங்கை அனிதாவின் நினைவாக அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்கு தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்துத்தந்த நூல்களை வழங்கினேன். இவை, என்னை சந்திக்கவரும் இளைஞரணியினர் வழங்கிய புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு. அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன். pic.twitter.com/X8t77naED3
— Udhay (@Udhaystalin) November 15, 2019