நடுவுல நிக்குறது நியூட்ரல் இல்லை, நியாயத்தின் பக்கம் நிக்கறதுதான் நியூட்ரல்: 'நெஞ்சுக்கு நீதி' டீசர்

  • IndiaGlitz, [Friday,February 11 2022]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரை பார்க்கும்போது பொள்ளாச்சியில் நடந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் குறித்த கதையம்சம் கொண்டது என்று தெரியவருகிறது. வரிசையாக பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் நிலையில் அதை காவல்துறை அதிகாரி உதயநிதி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.

என்னை பொருத்தவரை நடுவுல நிக்குறது நியூட்ரல் இல்லை, நியாயத்தின் பக்கம் நிக்கறதுதான் நியூட்ரல் என்ற உதயநிதி ஸ்டாலின் வசனத்துடன் முடிவடைந்துள்ள இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, மயில்சாமி, இளவரசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு திபு நிபுனன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

90s கிட்ஸ்களுக்கு இன்ப அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ்!

90s கிட்ஸ்கள் மிகவும் விரும்பிப் பார்த்த தொலைக்காட்சி தொடர் ஒன்றை திரைப்படமாக தயாரிக்க உள்ளதாக சோனி பிக்சர்ஸ் அறிவித்துள்ளதை அடுத்து  90s கிட்ஸ்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆண் குழந்தைக்காகக் கர்ப்பிணி செய்த காரியம்… அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

பாகிஸ்தான் நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனக்கு ஆண் குழந்தை

கேரள இளைஞருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு…  

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவே கேரளாவில் இளைஞர்

'மஹான்' திரைப்படம் குறித்து ரஜினி கூறியது என்ன? கார்த்திக் சுப்புராஜ் டுவிட்!

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மஹான்' திரைப்படம் நேற்று அமேசான் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே

தாராள மனதுடன் சம்மரை வரவேற்கும் யாஷிகா: நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கினார் என்பதும் இதனை அடுத்து அவர் சில மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் தற்போது