உதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்

  • IndiaGlitz, [Friday,January 17 2020]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சைக்கோ’ திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதே தேதியில் வைபவ் நடித்துள்ள ‘டானா’ என்ற படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் உதயநிதி உடன் நேருக்கு நேர் வைபவ் படம் மோதுவது உறுதியாகியுள்ளது.

வைபவ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். நோபல் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி இயக்கியிருக்கும் இந்தப் படம் போலீஸ் அதிகாரியாக விரும்பும் ஒருவருக்கு திடீரென கம்பீரக் குரல், பெண் குரலாக மாறினால் என்ன ஆகும் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வழக்கமான கதையாக இருக்காது என்றும் தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதைகளில் இதுவும் ஒன்று என்றும் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷின் 'கர்ணன்' படத்தில் இணைந்த இளம் நடிகை!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது 'பரியேறும் பெருமாள்'

நிர்பயா  வழக்கு - பாலியல் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒடுகின்ற பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இறந்த மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்திருந்தது

அம்மாவுக்கும் மகளுக்கும் தனித்தனி கள்ளக்காதலன்கள்: கொலையில் முடிந்த விபரீதம்

வேலூரை சேர்ந்த மக்கான் என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்கானுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணின் மகள் மகள்,

பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரிவு ஏற்படும் என நான் ஏற்கனவே கூறியது போலவே தற்போது நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது என பேட்டி ஒன்றில்

எளிய மக்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் – ஒரு வரலாற்று சரித்திரம்

தமிழக அரசியல் சந்தித்த பெரும் புயல், ஒரு வரலாற்று நாயகன், இந்தியாவே நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு சினிமா துறையிலும் அரசியல் துறையிலும் மைல் கல்லாக விளங்கியவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள்.