உதயநிதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,December 21 2019]

அரசியல் பணிகளில் பிசியாக இருந்தபோதிலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த த்ரில்லர் படமான ‘சைக்கோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து இந்த படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை உதயநிதியும் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார்.

ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஜனவரி 10ல் ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படமும், ஜனவரி 16ல் தனுஷின் ‘பட்டாஸ்’ திரைப்படமும் வெளிவரவுள்ள நிலையில் ஜனவரி 24ல் உதயநிதியின் ‘சைக்கோ’ ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் உதயநிதி நடித்திருக்கும் இந்த படத்தில் நித்யாமேனன் மற்றும் அதிதிராவ் ஹைதி ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மிரளவைக்கும் இசைஞானியின் இசையில் தன்விர்மிர் ஒளிப்பதிவில், அருண்குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டப்புள்மீனிங் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

More News

கியர் போட்ட கல்லூரி மாணவிகள்: சஸ்பெண்ட் ஆன பேருந்து டிரைவர்!

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று கொண்டிருந்த அந்த பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் ஒருவர் கல்லூரி மாணவிகளுக்கு கியர் போட கற்றுக் கொடுத்ததை

கூகுள், ஆண்ட்ராய்டுலாம் வேணாம்.. நாங்களே ஒரு OS செய்யப் போறோம்..! Facebook அதிரடி.

சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தனக்கென ப்ரேத்யேக இயங்குதளம் ஒன்றை உருவாக்கி வருகிறது. எதிர்காலத்திலும் கூகுளின் ஆண்ட்ராய்டை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க இந்த புதிய இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது.

`மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம்!’- ஜாமியா மாணவருக்காகக் கலங்கிய ஹர்பஜன் சிங்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடந்திவருகின்றனர்

காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளம்பெண்

காதலித்து கர்ப்பமாக்கி விட்டு அதன் பின்னர் திருமணம் செய்ய மறுத்த வாலிபர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண்ணால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

இதுதான் அமைதியான போராட்டமா? ரஜினி சொன்னதுதான் சரி! பிரபல நடிகர் 

மத்திய அரசு அறிமுகம் செய்த குடியுரிமை சீர்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாக