close
Choose your channels

உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Sunday, November 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும், தயாரிப்பாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வந்தோம்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை அடுத்து அவரது நடிப்பில் உருவான ’கண்ணை நம்பாதே’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டே இந்த படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் இன்று இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்து உள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘மீசையை முறுக்கு’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். மேலும் பூமிகா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஒரு கிரைம் திரில்லர் படம் ஆகும்.

ஏற்கனவே உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.