close
Choose your channels

அருண்ராஜா காமராஜ் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி!

Monday, May 17, 2021 • தமிழ் Comments

இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களும் அவருடைய மனைவி சிந்துஜா அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு திரை உலகினர்களை உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் மற்றும் அவருடைய மனைவி சென்னை தனியார் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்தார் என செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிந்துஜாவின் உடலுக்கு கண்ணீருடன் தனது இறுதி மரியாதையை செய்தார்

மேலும் அருண்ராஜா காமராஜ் அவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவும் உதயநிதி ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பி.பி.ஈ கிட் உடை அணிந்து அருண்ராஜா காமராஜ் அவர்களும் தனது மனைவிக்கு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதாவது:

நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz