close
Choose your channels

'விக்ரம்' ஆடியோ விழாவில் கமலிடம் முக்கிய கோரிக்கை வைத்த உதயநிதி!

Monday, May 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று உலகநாயகன் கமலஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனிடம் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடந்தது. இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலின் நேற்று இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பல்வேறு பணிகளுக்கு இடையே இந்த விழாவில் கலந்து கொண்டதற்கு நன்றி என்று கமல்ஹாசன் தெரிவித்தார் .

இந்நிலையில் உதயநிதி இந்த விழாவில் பேசியபோது, ‘கமல்ஹாசன் அவர்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும், ஆனால் அதே நேரத்தில் அவர் வருடத்திற்கு ஒரு திரைப்படமாவது நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.