close
Choose your channels

போனிகபூரின் அடுத்த தமிழ்ப்படம்: ஹீரோ, இயக்குனர் அறிவிப்பு

Sunday, August 23, 2020 • தமிழ் Comments

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராகிய போனிகபூர், முதன் முதலாக அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தை தயாரித்தார் என்பதும், அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று அவருக்கு லாபத்தை பெற்று கொடுத்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் அஜித் நடிக்கும் ’வலிமை’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேறு சில தமிழ் படங்களையும் தயாரிக்க போனிகபூர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ’ஆர்டிக்கிள் 15’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளதாகவும், அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனா’ என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தை ஜீஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து போனிகபூர் தயாரிக்கின்றார் என்பதும், இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினை அடுத்து மற்ற நடிகர்கள் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘ஆர்ட்டிக்கிள் 15’ திரைப்படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார் என்பதும், ரூ.29 கோடியில் தயாரான இந்த படம் ரூ.93 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz