close
Choose your channels

கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இல்லை: உதயநிதி 

Saturday, January 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி; திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் அவருடைய வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி சீரியல் ஆன ’குயின்’ என்ற சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்கப்பட இருப்பதாகவும் அதில் கருணாநிதி கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது

இது குறித்து விளக்கமளித்த உதயநிதி ஸ்டாலின் ’தன்னுடைய தாத்தா கருணாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் ஆனால் அந்த படத்தில் கருணாநிதி வேடத்தில் நடிக்க தான் விரும்பவில்லை என்றும் கூறினார். இருப்பினும் இதுகுறித்து தனது தந்தை முக ஸ்டாலின் அவர்களிடம் கலந்து ஆலோசித்து அதன் பின்னரே எதுவும் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos