close
Choose your channels

உதயநிதி ஸ்டாலினின் 'மனிதன்' சென்சார் தகவல்கள்

Wednesday, April 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் ரீமேக் படமான 'மனிதன்' படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து படத்திற்கு 'U' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். உதயநிதியின் முந்தைய படங்களான ஒருகல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா மற்றும் 'கெத்து' ஆகிய படங்களும் 'U' சர்டிபிகேட் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், விவேக், ராதாரவி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்துள்ளார்.

'மனிதன்' திரைப்படம் 'U' சர்டிபிகேட் பெற்றதை அடுத்து விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.