நம்ம ஆட்டத்தை டோட்டலா கலைச்சு ஆடுனது அவன் தான்: 'கலகத்தலைவன்' டிரைலர்

உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள ‘கலகத்தலைவன்’ திரைப்படம் இம்மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளி ஆகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது சுமார் இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் திரில் காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆரவ் இந்த படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்திருக்கிறார் என தெரிகிறது.

மகிழ்திருமேனி படம் என்றாலே சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற வகையில் இந்த படமும் அந்த பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காமெடி பண்ண நான் என்ன காமெடியனா? மணியிடம் ஆக்ரோஷமாக மோதும் போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது இனிப்பு தயாரித்து விற்பனை செய்யும் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' மற்றும் 'அடை தேனடை' ஆகிய இரண்டு அணிகளும் தீவிரமாக

கையை எடுங்க ரக்சிதா, வெட்கமா இருக்கு.. ராம்

கடந்த ஒரு மாதமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

விஜய்சேதுபதி- பொன்ராம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்: மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்

விக்ரமன் - அமுதவாணன் சண்டை: இந்த வாரத்தின் குறும்படம் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து வருகிறது என்பது தெரிந்ததே. 

11 மொழிகளில் வெளியாகும் 'தி காஷ்மிர் ஃபைல்ஸ்' இயக்குனரின் அடுத்த படம். மீண்டும் உண்மைக்கதை?

'தி காஷ்மிர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் தமிழ் உள்பட 11 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.