சாக்கடையில இறங்கினாத்தான் உண்மை கிடைக்கும்: உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி டிரைலர்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. இந்த படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் டிரெய்லரில் உள்ள ஒவ்வொரு வசனமும் ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

”எல்லாரும் சமம் என்றால் யார் சார் ராஜா?

அவங்க குடிக்கும்போது அழுக்காகாத தண்ணீர் நாங்க குடிச்சா மட்டும் அழுக்காகி விடுமா?

அவங்க அவங்க இடத்துல அவங்க அவங்கள வைக்கனும், அப்பதான் சமுதாயத்தில் ஒரு பேலன்ஸ் இருக்கும்.

சாக்கடையில் இறங்கினாத்தான் உண்மை கிடைக்கும் என்றால் அந்த சாக்கடையில் இறங்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்”.

போன்ற வசனங்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

ஜாதி வெறி பிடித்த ஒரு கிராமத்தில் அடுத்தடுத்து தலித் பெண்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று போராடும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதைதான் இந்த நெஞ்சுக்கு நீதி.

இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’ஆர்ட்டிகிள் 13’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிகினி உடையில் பிறந்த நாள் கேக் வெட்டிய பிரபல நடிகரின் மகள்: நெட்டிசன்கள் விமர்சனம்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகள் பிகினி உடையில் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரலான நிலையில் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை

'அவதார்' படத்தின் அட்டகாசமான டீசர்: முதல் பாக வசூலை முறியடிக்குமா?

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது .

அனிருத் இசையில் முதல்முறையாக பாடிய கமல்ஹாசன்: வைரல் புகைப்படங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே பல பாடல்கள் எழுதி பாடியுள்ள நிலையில் முதல் முறையாக அனிருத் இசையில் ஒரு பாடலை எழுதி பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உறவினருடன் செல்பி எடுத்த மனைவி: ஆத்திரத்தில் கணவன் செய்த விபரீத செயல்!

 உறவினருடன் செல்பி எடுத்த மனைவி மீது கோபம் கொண்டு கணவன் செய்த விபரீத செயலால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு 12 லட்சத்தில் வீடு கட்டு கொடுத்த பிரபல தொழிலதிபர்!

 கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு பிரபல தொழிலதிபர் 12 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார் .