close
Choose your channels

விஜயகாந்த் - உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

Tuesday, May 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திமுக தலைவரின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார் என்பதும் அவர் அமைச்சராக பதவி ஏற்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து உள்ளார். விஜயகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது எல்கே சுரேஷ் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

நடந்து முடிந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்த விஜயகாந்தின் தேமுதிக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா டெபாசிட் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos