போலீஸ் மட்டுமின்றி இவர்களும் குற்றவாளிகள் தான்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து உதயநிதி!

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து தமிழ்த் திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய ஆவேசமான கண்டனங்களை சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், பாடகி சுசித்ரா, கார்த்திக் சுப்பராஜ், பால சரவணன் உள்பட பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இதுகுறித்து தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் ஃபென்னிக்ஸ் மரணத்துக்கு காவல்துறையினர் மட்டும் காரணமல்ல, மாஜிஸ்திரேட், மருத்துவர்கள் மற்றும் சிறைத் துறை அதிகாரிகளும் காரணம் என்றும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஜெயராஜ், பென்னிக்ஸை கொன்றவர்கள் நேரடி குற்றவாளிகள் என்றால், அவர்களின் உடல் காயங்களை பார்த்து மருத்துவமனைக்கு பரிந்துரைக்காத மருத்துவர், அந்த காயங்களை பதிவு செய்யாத மாஜிஸ்திரேட், போலீசின் குற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தந்த சிறைத்துறை அதிகாரி ஆகியோரும் இக்குற்றத்துக்குத் துணைபோனவர்களே.

இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்குமுன்பாக கொலைவழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு. மற்றபடி சஸ்பெண்ட், பணியிடமாற்றம், காத்திருப்பு பட்டியல் என்பது வெறும் கண்துடைப்பே.

ட்ரோன் விட்டனர், முட்டிபோடவைத்தனர், இம்போசிஷன் எழுத வைத்தனர். அன்று சிரித்தோம். மதுரை அப்துல்ரஹீமை கொன்றனர், கோவை தள்ளுவண்டி சிறுவனை தாக்கினர். உச்சமாக ஜெயராஜ்-பென்னிக்ஸை கொன்றுள்ளனர். இன்று அழுகிறோம். தவறை முதல்புள்ளியிலேயே தடுக்க, தட்டிக்கேட்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More News

கொரோனா நேரத்தில் செல்போன் பத்திரம்: பயமுறுத்தும் தொழில்நுட்பத் தகவல்கள்!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியத் தாக்கத்தால் பல பொருட்களின் இறக்குமதி குறைந்து இருக்கிறது.

சாத்தன்குளம் சம்பவம் குறித்து கருத்து சொன்ன முதல் இந்திய கிரிக்கெட் அணி வீரர்!

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும்

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30க்கும் பின்னரும் நீட்டிக்கப்படுமா? முதல்வர் பரபரப்பு தகவல் 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் அடுத்தடுத்து ஐந்து கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்துள்ளது.

டிக்டாக் பிரபலமான 16 வயது இளம்பெண் தற்கொலை: மிரட்டப்பட்டதாக புகார்

டெல்லியில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட டிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை செய்துகொண்டது அவரது ரசிகர்களுக்கிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

பிரியாணி வாங்கித்தர மறுத்த கணவன், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை!

கணவர் பிரியாணி வாங்கித் தரவில்லை என்ற கோபத்தால் மனைவி தீவைத்து தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது