தேசிய விருது பெற்ற பட இயக்குனருடன் இணையும் உதயநிதி

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் 'கோபுர வாசலிலே', 'சினேகிதியே', 'லேசா லேசா', 'காஞ்சிவரம்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் காஞ்சிவரம்' திரைப்படம் தேசிய விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த நிலையில் மீண்டும் தற்போது ஒரு தமிழ்ப் படத்தை விரைவில் இயக்கவுள்ளார்.

பிரியதர்ஷனின் அடுத்த தமிழ்ப்படத்தில் கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நாயகனான உதயநிதி நடிக்கவுள்ளார். பிரியதர்ஷன் - உதயநிதி முதன்முதலாக இணையும் இந்த படத்தை மன்சூட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சந்தோஷ் தயாரிக்கவுள்ளார். இந்த தகவலை உதயநிதி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் உள்பட முழுவிபரங்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தற்போது 'பொதுவாக என் மனசு தங்கம்', மற்றும் 'இப்படை வெல்லும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல தயாரிப்பாளரின் பிறந்த நாள் விழாவில் விஜய்-சமந்தா

பிரபல இயக்குனர் ராம நாராயணன் அவர்கள் ஆரம்பித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே....

பாகிஸ்தானை பந்தாடிய போட்டியில் கிரிக்கெட் கடவுளை சந்தித்த தனுஷ்

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின....

இன்று முதல் சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார் விஷால்

கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உன்னிகிருஷ்ணன் இயக்கி வ&

லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா?

இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரமான மான்செஸ்டர் நகரில் சமீபத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அந்நாட்டு மக்கள் மீள முடியாத நிலையில் இன்று மீண்டும் லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்...

ரஜினியின் அரசியல் சாணக்கியத்தனம் தொடங்கிவிட்டதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மிக விரைவில் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...