'மாமன்னன்' இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலம்: உதயநிதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,June 01 2023]

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலம் ஒருவரின் பெயரை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இசை புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் 'மாமன்னன்’. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த விழாவில் மேலும் சில பிரமுகர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.