கமல்ஹாசனுக்கு ஆதரவளித்த தந்தையும், மகனும்!

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபகாலமாக தமிழக அரசு குறித்து வெளியிட்ட தைரியமான விமர்சனங்களால் ஆத்திரம் அடைந்த ஆட்சியாளர்கள் அவரை மிரட்டும் தொனியில் நடந்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதில் முதன்முதலில் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். ஸ்டாலினின் ஆதரவுக்கு கமல் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தந்தை ஸ்டாலினை அடுத்து மகன் உதயநிதியும் கமலுக்கு ஆதரவாக தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி கூறியதாவது: ஜனநாயகத்தில் அனைவருக்கும் தங்கள் கருத்தை பதிவு செய்யும் உரிமை உள்ளது. கருத்துக்கு பதில் கருத்து தெரிவிக்க முடியுமே தவிர, கருத்து தெரிவிப்பதை யாரும் தடை செய்ய முடியாது' என்று கூறியுள்ளார்.

More News

கமலின் தமிழ் கவிதையை மொழி பெயர்த்த கஸ்தூரி

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழின் மீது அளவில்லா காதல் கொண்டவர் என்பதும் அவருடைய பேச்சும், எழுத்தும் சுத்த தமிழில் இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஹவுஸ் ஓனராக' மாறிய பெண் இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் பெண் இயக்குனர்கள் அரிதாகவே இருக்கும் நிலையில் குணசித்திர நடிகையாகவும் இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன்...

அஜித்தின் அடுத்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், 'கோச்சடையா', 'விஐபி 2' படங்களின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது 'விஐபி 2' படத்தின் புரமோஷன்களில் பிசியாக உள்ளார்...

விஷாலின் 'துப்பறிவாளன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்தில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது...

சச்சின் தெண்டுல்கருடன் கைகோர்த்தார் கமல்ஹாசன்

ஒருபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பு, இன்னொரு பக்கம் தமிழக அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வரும் கமல்ஹாசன் தற்போது கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கருடன் கைகோர்த்துள்ளார்...