படித்து கொண்டே விபச்சாரம் செய்த கல்லூரி மாணவி படுகொலை

  • IndiaGlitz, [Thursday,February 02 2017]

உகாண்டா நாட்டை சேர்ந்த இளம்பெண் பெங்களூரில் படித்து கொண்டே விபச்சாரம் செய்த நிலையில் பேரம் படியாததால் வாடிக்கையாளர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.

உகாண்டாவை சேர்ந்த இளம்பெண் புளோரன்ஸ் நகயாகி. இவர் பெங்களூரில் தங்கி படித்து வந்தார். படித்து கொண்டே கூடுதல் செலவுக்காக விபச்சாரமும் செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு வேலை தேட வந்த இஷான் என்பவரிடம் ரூ.5000 பேரம் பேசிய புளோரன்ஸ், அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார்.

ஆனால் அங்கு வேறொருவர் புளோரன்ஸ்க்காக அதிக தொகையுடன் காத்திருந்ததால், இஷானிடம் பேசிய தொகையைவிட அதிகம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு இஷான் சம்மதிக்கவில்லை. இதுகுறித்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென இஷானை புளோரன்ஸ் கத்தியால் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இஷான், புளோரன்ஸ் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தி கொலை செய்தார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இஷானை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கல்வி கற்க வந்த உகாண்டா இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

விஷால் சஸ்பெண்ட் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கத்திற்கு நாளை வரை கெடு

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், சங்கத்தின் நிர்வாகத்தை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திலும் பல சீர்திருத்தங்கள் செய்ய விரும்பினார். ஆனால் அவர் கொடுத்த பேட்டி ஒன்றை அடிப்படையாக வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்...

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு. மாறன் சகோதரர்களுக்கு அளிக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது...

6 விக்கெட்டுக்கள் எடுத்த சஹலை தோனி திட்டியது ஏன்?

இந்தியா, மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று மும்பையில் மோதிய 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா கொடுத்த 203 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாக இங்கிலாந்து எட்டிவிடும் என்றுதான் முதல் பத்து ஓவர்களை பார்த்தவர்கள் ஊகித்திருப்பார்கள்....

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் மனிதாபிமானமின்றி புகைப்படம் எடுத்த பொதுமக்கள்.

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் போலீஸ், கோர்ட் என்று அலைய வேண்டிய நிலை வரும் என்றுதான் பலர் அதில் ஈடுபடுவதில்லை. இதற்காகத்தான் சுப்ரீம் கோர்ட்டே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களை துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது...

'விவேகம்' டைட்டிலில் மொபைல் நம்பரா?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது...