close
Choose your channels

ரஷ்ய ராணுவம் தாக்குதலில் விருது பெற்ற பிரபல நடிகை பரிதாப பலி!

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஷ்ய ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் விருது வென்ற பிரபல நடிகை ஒருவர் பரிதாபமாக பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் இந்த போரால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று ரஷ்ய ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குடியிருப்பு பகுதிகளில் குடியிருந்த அந்நாட்டின் நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது .

உக்ரைன் நாட்டின் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருதான Honored Artist of Ukraine' என்ற விருதை நடிகை ஒக்சானா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருப்பு பகுதியின் மேல் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக விருது வென்ற பிரபல நடிகை பலியாகி இருப்பது உலகம் முழுவதும் திரையுலகினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.